Archive for the ‘Uncategorized’ Category

உயர்நிலை இரண்டு

Saturday, March 15th, 2008

எனதருமை உயர்நிலை இரண்டு மாணவர்களே,

கீழ்வரும் கட்டுரைத் தலைப்பிற்கு ஏற்ற சில கருத்துக்கள் தரப்பட்டிருக்கின்றன. இக்கருத்துக்களைப் பயன்படுத்தி உன்னுடைய சொந்தக் கருத்துக்களையும் பயன்படுத்தி 300 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரையை எழுதி 28.3.08 வெள்ளிக்கிழமையன்று என்னிடம் ஒப்படைக்கவும்.

இன்றைய இளைஞர்கள் நண்பர்களின் செல்வாக்கிற்குப் பெரிதும் ஆளாகிறார்கள்- கருத்துரைக்க

பத்தி 1- நண்பர்களின் முக்கியத்துவம்                                                                                     நண்பர்கள் அற்ற வாழ்க்கை சுவாரசியமற்றதாக இருக்கும்      தனிமையில் இனிமை காண முடியாது                                            நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை

பத்தி 2+3- இளைஞர்களின் இக்கால வாழ்க்கை முறை          பெரும்பாலான நேரத்தைப் பள்ளியில் கழிக்கின்றனர்                        பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர்                               

 இன்றைய சூழலில் நண்பர்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளது      ஒரே வயதினராக இருப்பதால் நண்பர்களின் வாக்கு வேதவாக்காக இருக்கும்                                                                                                                                       நட்பு வேண்டும் என்பதற்காக நண்பர்கள் சொல்வதை இளைஞர்கள் கேட்பார்கள்                                                                                                                       நண்பர்கள் செல்வாக்கிற்கு ஆளாவது தவறல்ல- ஆனால் சுயமாக சிந்தித்துச் செயல்படும் ஆற்றலை இளைஞர்கள் பெறவேண்டும்- நட்புக்கொள்பவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும்

பத்தி-4-  ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்                                               

 உன் நண்பன் யாரென்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் சொல்கிறேன்- சான்றோர் வாக்கு                                                                            

பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும் 

 நல்லவனுடன் சேர்ந்தால் பல நன்மைகளைப் பெறலாம்

பத்தி-5- நல்லவனின் நட்பு நம்மை எவ்வாறு பயன் அடையச் செய்கிறது?                                                                                                                                              நல்ல நண்பர்கள் நல்ல நூல்கள் போன்றவர்கள்  

நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதைப் போல பழகப் பழக இன்பம் தருபவர்கள் நல்ல நண்பர்கள்  

சிறந்த பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றன. 

குழுவாகச் செயல்பட முடிகிறது  

கூட்டாக முயற்சி செய்வது அதிகப் பயனைத் தரும் 

சோர்வடைந்த நேரங்களில் அவர்களின் துணை பெருத்த ஆறுதலைத் தருகிறது, துன்பத்தை நீக்குகிறது

பத்தி-6- தீயவர்களுடன் நட்புக் கொண்டால் வாழ்க்கை தடம் புரண்டு விடும்.                                                                                                                                     எதிர்கால வபழ்க்கை சீரழிந்துவிடும் 

நண்பன் எப்படி இருந்தாலும் நான் நல்லவனாக இருப்பேன் என்பது வீண்வாதம்-நண்பன் எப்படியோ அப்படித்தான் நாமும் செல்வோம்   எனவே ஆராயாமல் நட்புக் கொள்ளக் கூடாது

பத்தி7-முடிவுரை - உண்மை நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்                                                                                                                   நண்பர்களின் கருத்துக்கள் அனைத்திற்கும் தலையாட்டாமல் பெற்றோரின்/மூத்தோரின் அறிவுரைக்குச் செவி சாய்க்க வேண்டும்    

பெற்றோர் அனுபவம் மிக்கவர்கள்  

நம் நன்மைக்காகவே பாடுபடுபவர்கள்  

நம் நாடே இளைஞர்களின் கையில்- அதை உணர்ந்து செயல்படவேண்டும்

                                               முற்றும்

கருத்துக்களைப் படித்துவிட்டு, கட்டுரையை நன்கு திட்மிட்டு எழுதவும். தெய்வப்புலவரின் திருக்குறளைத் துணையாகக் கொண்டு எழுதவும்.79,80 ஆகிய அதிகாரங்களைப் படித்துப் பார்த்து ஏற்றவற்றை மேற்கோள் காட்டி எழுதவும்

நன்றி- பள்ளியில் சந்திப்போம்

உயர்நிலை நான்கு- கட்டுரை

உலகில் நன்னெறிகளைப் பின்பற்றுபவர்களை விட அவற்றைப் போதிப்பவர்களே அதிகம்- கருத்துரைக்க 

 பத்தி-1  நன்னெறிகள் ஏன் தோன்றின மண்ணில் நல்ல வண்ணம் வாழ-வழிகாட்டமனிதன் தீயவனாகாமல் தடுக்கும் கவசம் போன்றது நன்னெறிகள்

மானிட சமுதாயத்துக்கு வழிகாட்டி

 சரியான பாதையில் செல்ல கலங்கரை விளக்கமாக விளங்குபவை நன்னெறிகள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான்……………………..

உயிரைவிட ஒழுக்கமே மேலானது

நன்னெறிகள் வாழ்க்கையைச் சிறந்த வண்ணம் வாழ்வதற்கு வழி கோலுகின்றன. 

பத்தி-2   பழங்காலந்தொட்டே நன்னெறி நூல்கள் பல எழுந்திருக்கின்றன-அவற்றை எழுதிய சான்றோரும் அதன்வழி வாழ்ந்தும் காட்டியிருக்கின்றனர். அக்காலச் சான்றோர்- திருவள்ளுவர்,புத்தர்,காந்தியடிகள்தமிழ்மொழியில் நீதிஇலக்கியம்- திருக்குறள் தொட்டு இன்றுவரை பல தோன்றியிருக்கின்றன.

இத்தனை நூல்கள் தோன்றியதற்குக் காரணம் என்ன?

மனிதன் நன்னெறியுடன் நடக்காததாலா அல்லது நன்னெறியின் முக்கியத்துவத்தாலா? 

 பத்தி 3  நன்னெறி போதிப்பவர்கள்- அதன்படி நடந்துகாட்ட வேண்டும் நூல்கள், சான்றோர்கள், தலைவர்கள் இவர்களை அடுத்து நன்னெறிகள் போதிப்பவர்கள் நல்ல நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்நெறிகளை போதிக்கும் பலர் ஊருக்குத்தான் உபதேசம் செய்கின்றனர்- இக்காலத்தினரின் எண்ணம்அக்காலம்- சான்றோர் சொன்னபடி வாழ்ந்து காட்டினர்/ வாழ்ந்தபடி சொன்னார்கள் 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பழக்கம்- இல்லை

கனவினும் இன்னாது மன்னோ (குறள் 819) 

பத்தி 4 இன்றைய உலகம்- இயந்திர உலகம்

பணத்திற்கே அதிக மரியாதை

போட்டி மிக்க உலகம்

யார் பின் தங்குவார்-முன் சென்று விடலாம் என்ற நிலை

பணத்தின் முக்கியத்துவம் அதிகரிக்க நன்னெறிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன

நன்னெறிகள் என்பவை ஏட்டில் மட்டுமே படிக்கும் ஒன்றாகிவிட்டது

நல்ல பண்பும் மரியாதையும் உதட்டளவில் மட்டும் வாசம் செய்யும் ஒன்றாகிவிட்டது 

பத்தி 5 நன்னெறிகள் என்பவை கற்பிக்கப்படவேண்டிய ஒன்றாகவும் கற்கப்படவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டதே ஒழிய பின்பற்றப்படுவதில்லை

சொல்லுதல் யார்க்கும் …….(குறள்664)

கற்க கசடற………..(குறள்391) என்ற குறளை பலரும் நன்னெறிகளைப் பொறுத்த வரையில் பின்பற்றுவதில்லை

போதிப்பவர்கள் பலர்- பின்பற்றுபவர்கள் சிலர்(அருகி/குறைந்து வருகிறது 

 பத்தி-6 பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை மக்கள் உணர்ந்த அளவு அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு/ இயேசுவின் வாக்கு-        

இந்த அளவுக்கு இந்தக் காலத்தில் இல்லாவிட்டாலும் உலகம் உய்ய, அமைதியுடன் விளங்க ஏற்ற நன்னெறிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்

 கட்டுரை எழுதுவதற்கான சில கருத்துகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்துப் பார்த்து தேவையான கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து உம் சொந்தக் கருத்துகளையும் சேர்த்து , கட்டுரையை நன்கு திட்டமிட்டு 350 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரையை எழுதி வெள்ளிக்கிழமையன்று(28.3.08) என்னிடம் ஒப்படைக்கவேண்டும் 

முற்றும்                                                             


Bad Behavior has blocked 1 access attempts in the last 7 days.